பெற்றோர்கள் தான் தங்களது பிள்ளைகளின் முன்மாதிரியாவர். சிறு பிள்ளைகள் வளர்ந்து டீனேஜர்களாகின்றனர்.
அப்போது அவர்களது சமூக வட்டம் பிரிவடைந்தாலும் அவர்களது முதன்மையான ஊக்கம் மற்றும் வாஞ்சைக்கான ஆதாரம் மாறுவதில்லை. டீனேஜ் பருவத்தில் சில பிள்ளைகள் தங்களது பெற்றொரிடம் பேசுவது சிரமமாக உள்ளது என்பதால் பேசுவதையே குறைத்து விடுகின்றனர்.

நேர்மறையான பேரன்டிங் இப்போது தான் கைகொடுக்கும்.
பிள்ளைகளின் தினசரி வாழ்வில் மேலும் ஆர்வத்துடன் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். நேர்மறையான வார்த்தைகள் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து உங்களிடம் எந்த விஷயத்தையும் இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
"உன்னால் நிச்சயம் முடியும்"
உங்களது பிள்ளைகளின் திறன் மேல் அலாதியான நம்பிக்கை வையுங்கள். "இது உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா?" என்றோ அல்லது "இதெல்லாம் உனக்கு கஷ்டம்" என்றோ சொல்வதற்கு பதில் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசி பாருங்கள். பேசும் வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்துவது அவசியம். அவளால் கண்டிப்பாக முடியும் என்று உற்சாகப்படுத்தி அவர்ளை மேலும் உயரம் தொட ஊக்குவிக்கலாம்.
"உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்!"
சிறிய சாதனைகளை கூட பாராட்டி கைதட்டி ஊக்குவிக்க வேண்டும். அவர்களது முயற்சிகளையும் வெற்றிகளையும் நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்ற மகிழ்ச்சியை நீங்கள் தர வேண்டும். இதனால் அடுத்த முறை மேலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை நோக்கி அவள் முன்னேறுவாள்.
"என்ன நடந்தாலும் சரி, நான் உன்னை நேசிப்பேன்"
சில நேரங்களில் அவள் நினைத்த வெற்றி கைகூடாமல் போகலாம். அந்த நேரத்தில் தான் உங்களது ஆதரவும் அரவணைப்பும் அவளுக்கு மிகவும் தேவை. அவளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் சரி வெற்றியில் முடிந்தாலும் சரி உங்களது ஆதரவும் நேசமும் எப்போதும் அவளுக்கு உண்டு என்பதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.
"அட, சூப்பர்! மேலும் சொல் கேட்போம்"
புதிய ஐடியாக்கள் அல்லது சாதனைகளை பற்றி பேச சில நேரங்களில் டீனேஜ் பிள்ளைகள் வெட்கப்படக் கூடும். அவளது முயற்சியை கூர்ந்து கவனித்து மேலும் அவளது ஐடியாவை விரிவாக கூறுமாறு ஆர்வத்துடன் கேட்டால் அவளது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
"ஒரு கதை சொல்றேன் கேட்கிறாயா?"
அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டால் மட்டும் போதாது. உங்களது சிறு வயதில் கேட்ட மற்றும் அனுபவித்த விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களது வெற்றிக் கதைகளை பற்றி மட்டுமல்லாமல் தோல்வி கதைகளையும், உங்களது கூந்தல் மற்றும் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அதை நீங்கள் எப்படி சரி செய்தீர்கள் என்பதையும் அதனை பற்றி கவலையின்றி எப்படி த்ன்னம்பிக்கையுடன் இருந்தீர்கள் என்பது பற்றியும் அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். டீனேஜ் பிள்ளைகள் அந்த கதைகளை கேட்க ஆர்வமில்லாதது போல காட்டிக் கொண்டாலும் அவற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை மனதில் பதித்து கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்வர்.
"தவறு செய்வது சகஜம் தான்"
வளரும் பருவத்தில் சுயமரியாதை பாதிக்கப்படுதல், ரிஸ்க் எடுக்கும் போது தவறு செய்து விடுதல் மற்றும் சோதனை முயற்சிகளில் தோற்று விடுதல் ஆகியவை சகஜம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் அந்த தோல்வியிலேயே மூழ்கி விடாமல் தன்னம்பிக்கையுடன் எப்படி எழுவது அவசியம் என்பதை அவர்கள் அறிய வேண்டும். தோல்விகளை புறம் தள்ளி புதிதாக தொடங்க கற்க வேண்டும். ஒவ்வொரு சவாலிலும் சாதனையிலும் அவர்களது சுய மரியாதை அதிகரிக்க வேண்டும்.
"நோ சொல்வதில் தவறில்லை!"
துணிச்சல் மிக்க மகளை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். தேவையற்ற மற்றும் சங்கடம் ஏற்படுத்தும் செயல்பாடுகளை ஒருவர் செய்யும் போது அதற்கு துணிச்சலாக நோ சொல்ல அவள் பழக வேண்டும். அவள் வெறும் காட்சிப் பொருளல்ல என்பதையும் அவளது உடல் அவளுக்கு மட்டுமே சொந்தமானது என்பதையும் அவள் புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணி நேரமும் செய்வது அவளது கடமை. அதே நேரத்தில் அவளது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள எப்போதும் நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையையும் அவளுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
"நீ நீயாக இருக்க எப்போதும் தயங்காதே"
தன்னம்பிக்கை என்பது உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். மந்தை ஆடு போன்று இல்லாமல் சுயமாக சிந்திக்கவும், அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுக்கவும் தனக்கான பாதையை வகுத்துக் கொள்ளவும் டீனேஜ் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அவளது வளரும் பருவத்தை சிறப்பாக செதுக்கியமைக்காக பல வருடங்களுக்கு பிறகு அவள் உங்களுக்கு கட்டாயம் நன்றி சொல்வாள்!