சீனா அமைத்துவரும் விண்வெளி ஆய்வு மையம் வியக்கதக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டியான்காங் (Tiangong) விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி மையத்தில் 3 முதல் 6 பேர் வரை செல்லலாம். இது 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
தென் சீனாவில் இருக்கும் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் வான்வெளி கண்காட்சியில் நவம்பர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இவை பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1992 ம் ஆண்டு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 26 மடங்கு சிறியதாக இருந்தபோதும், சீனா தனது விண்வெளி நிலையத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.



