Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 7, 2018

எவ்ளோ உப்பு போட்டு சாப்பிட்டாலும் போதவில்லையா.? அப்ப உங்களுக்கு.....?



மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) என்பது, ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது



அதாவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான் இந்த மாரடைப்பு வர கரணம்.

இதயத்திற்கு செல்லும் இந்த முக்கிய இரத்த குழாயில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து அடிப்பு ஏற்படுவதால் மாரடைப்பு வருகிறது.

மாரடைப்பு என்றாலே பொதுவாக இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப்பிரட்டல், வாந்தி, வலி, கை, கால்களில் வீக்கம் என பல அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்.


இந்திய மறுத்து வளர்ச்சியில் இந்த மறைடைப்பில் இருந்து முழு குணமாகிய வாய்ப்புள்ளது. அதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது.

மாரடைப்பு வராமல் உங்களை காத்துக்கொள்ள.,



* உங்கள் கொலஸ்டிரால் அளவை நன்கு கண்காணித்துக்கொள்ளுங்கள்.
* நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது.
* உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
* கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும்.
* கண்டிப்பாக புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்.புகை பிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
* ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் வேண்டாம் இது ரத்த குழாயில் அடைப்புகளை ஏற்படுத்தும்.
* பொதுவாக சாப்பாட்டில் உப்பின் அளவினை குறையுங்கள்.
* நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து உங்களால் நன்கு முடியும் வரை உடற்பயிற்சி செய்யுங்கள்.
* உங்கள் மனதினை அமைதி வைத்து கொள்ளுங்கள். மன அழுத்தம் இதயத்தினை சீக்கிரம் பாதிக்கும்.
* உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.