Subscribe Us

Monday, October 22, 2018

வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்த பொதுமக்கள்!

திருவண்ணாமலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர் மாணவியின் உறவினர்கள்.



திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் இயங்குகிறது அரசினர் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் கண்ணன் என்பவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஒரு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். 



இதை அந்த மாணவி வீட்டில் சொல்ல அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் கண்ணனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அங்கு பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பினரிடம் கேட்டோம்.