Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 24, 2018

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்


சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாட வேண்டும் என நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.



இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதோடு, கொண்டாடப்பட்டதற்கான விவரங்களையும் யுஜிசி கண்காணிப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை, நாட்டின் ஒற்றுமையை வலிமைப்படுத்தும் விதமாகவும், தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.



அதன்படி, ஒன்றுபட்ட பாரதம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகளை கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான விவரங்களையும் யுஜிசி-க்கு அனுப்பிவைக்க வேண்டும்.