Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 24, 2018

பேப்பர் இன்ஜினியரிங் படிப்பு!




காகிதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சாதாரணமாக வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை மடிக்கும் காகிதம் முதல் நாளிதழ்கள், குறிப்பேடுகள், மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள், வெள்ளை தாள்கள் என எல்லாவற்றுக்கும் காகிதம் என்பது மிகவும் அத்தியாவசியமானது. காகிதம் இல்லாமல் எதையும் செய்துவிட முடியாது. 



கணினி பயன்பாடு இருந்தாலும், காகிதத்துக்கான முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. காடுகளை அழிவதை தடுக்க காகிதத்தின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்தாலும், அதன் பயன்பாடு குறையவில்லை. 

அதற்கான தேவை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் பேப்பர் இன்ஜினியரிங் படித்தால் அத்துறையில் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டலாம். காகிதம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து வருவாய் ஈட்டலாம். அதற்கு பேப்பர் தொழில் நுட்பம் கற்றுக் கொள்ள பேப்பர் இன்ஜினியரிங் படிக்க வேண்டியது அவசியமாகும். 



M.Tech./M.Arch. & M.U.R.P ஆகிய படிப்புகள் பேப்பர் டெக்னாலஜிதுறையில் உள்ளன.
பேப்பர் இன்ஜினியரிங் படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனம் :
Indian Institute of Technology, Roorkee - https://www.iitr.ac.in/academics/pages/Postgraduate_Programmes_Including_Ph_D__.html
- எம்.அருண்குமார்