
இந்த புதிய அம்சத்தை கொண்டு ஒரு கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது நிலவரத்தை லைவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது கூடுதல் நேரம் எடுத்து கொள்ளுமா என்ற விவரங்களையும் இந்த அம்சம் வழங்குகிறது.

இத்துடன் வழித்தடத்தில் இருக்கும் ட்ராபிக் அல்லது அடுத்த ரெயில் கிளம்பும் நேரம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
உலகம் முழுக்க 80 பகுதிகளில் உள்ள டிரான்சிட் ரைடர்கள், தங்களது பேருந்து மற்றும் ரெயில் எங்கு இருக்கிறது என்பதை லையில் பார்க்க முடியும். சிட்னி நகரில் இந்த வசதியை வழங்க கூகுள் நிறுவனம் நியூ சவுத் வேல்ஸ் உடன் இணைந்துள்ளது. இதை கொண்டு அடுத்து வரும் பேருந்து அல்லது ரெயிலினுள் ட்ராபிக் எந்தளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த அம்சம் விரைவில் உலகம் முழுக்க அதிகப்படியான நகரங்களில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகுள் பிளே மியூசிக் போன்ற சேவைகள் கூகுள் மேப்ஸ் தளத்தினுள் இயக்க முடியும். இதனால் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் செய்யும் போதே பாட்காஸ்ட்களை கேட்க முடியும். வரும் வாரங்களில் புதிய அம்சங்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்கப்பட இருக்கிறது.