JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, October 27, 2018

இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கல்





விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்குக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், குறித்தும் மழைக் காலங்களில் என்ன என்ன செய்யவேண்டும்
என்ன என்ன செய்யக் கூடாது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறு, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் மு. இராமமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.