Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 25, 2018

டெங்கு காய்ச்சல் எதிரொலி 'லீவ்' எடுத்த மாணவர் பட்டியல் அளிக்க உத்தரவு


காய்ச்சலால் விடுமுறை எடுத்த மாணவர்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.





இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையை உடனடியாக அளிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம். 



அதில் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.














அதன் அடிப்படையில், அந்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளோம்.