
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
அறிவியியல்
» Science Fact - மோட்டார் சைக்கிளில் உள்ள சக்கரங்களில் ஆரைக் கம்பிகள் (spokes) இருப்பதும் ஸ்கூட்டர் சக்கரங்களில் அவை இல்லாமல் இருப்பதும் ஏன் ?
Science Fact - மோட்டார் சைக்கிளில் உள்ள சக்கரங்களில் ஆரைக் கம்பிகள் (spokes) இருப்பதும் ஸ்கூட்டர் சக்கரங்களில் அவை இல்லாமல் இருப்பதும் ஏன் ?
தமிழ்க்கடல்Saturday, October 27, 2018

மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின் சக்கரங்களில் ஒன்றில் ஆரைக்கம்பிகள் இருப்பதற்கும் மற்றவற்றில் அவை இல்லாமல் இருப்பதற்கும் பெரிய அறிவியல் காரணம் ஏதுமில்லை.

மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், ஸ்கூட்டர் சக்கரங்களை விட அளவில் அதாவது விட்டத்தில் பெரியவை; எனவே மோட்டார் சைக்கிளின் சக்கரங்களைக் கம்பிகளின்றி திண்ணிய (solid) பொருளாக அமைத்தால் எடை மிகுதியாகி அவற்றை விரைந்து செலுத்துவதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும்.
தற்போது பந்தைய மோட்டார் சைக்கிள்களில் கார்பன் இழைக்கலவையுடன் கூடிய பொருளைக் கொண்டு செய்யப்பட்ட, எடை குறைந்த, ஆரைக்கம்பிகளற்ற, திண்மமான பெரிய சக்கரங்களைப் பயன் படுத்துவதைக் காணலாம்.








