Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 27, 2018

Part time ல் - ஆசிரியர்கள் M.phil பயில பெரியார் பல்கலை கழகம் மறுப்பு - அறிவிப்பை ரத்து செய்ய தேர்வர்கள் கோரிக்கை!



Part time ல் - M.phil பயில பெரியார் பல்கலை கழகம் மறுப்பு.

அனுப்புதல்
                          XXX
                          முதுகலை பட்டதாரி ஆசிரியர்
                          அ.மே.நி.பள்ளி
                          வேலூர் மாவட்டம்

பெறுநர்
                          உயர்திரு உயர் கல்வித்துறை அமைச்சர்
                          உயர் கல்வி துறை அலுவலகம்
                          சென்னை

ஐயா,

                          பொருள்:  நான் பெரியார் பல்கலை கழகத்தில் பகுதி நேரத்தில்                                                       M.phil படித்தல் சார்பாக.

                          நான் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது வேலூர் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் உயர் கல்வி (M.phil) பயில பெரியார் பல்கலை கழகத்தில் விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதினேன். பிறகு அதன் உறுப்பு கல்லூரியான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் M.phil part time (Physics) பயில விண்ணப்பித்து பிறகு நேர்காணல் கலந்து கொள்ள சென்றேன். 

                          நேர்காணல் முடிந்தது, அப்போது தான் இவர்கள் ஒரு அறிவிப்பை தெரிவிக்கின்றனர். என்னவென்றால் பெரியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே பயில முடியும் என்று சொல்லி விட்டு , தேர்வு பட்டியல் பல்கலை கழகத்திலிருந்து வரும் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த அறிவிப்பை விண்ணபிக்கும் முன்பே வெளி விட்டிருந்தால் நாங்கள்,

1. நுழைவு தேர்வு விண்ணப்பித்திருக்க மாட்டோம்,
2. நுழைவு தேர்வு எழுதி இருக்க மாட்டோம்,
3. அதன் உறுப்பு கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க மாட்டோம்,
4. நேர்க்காணல் கலந்திருக்க மாட்டோம்,

ஆணால் வேலூர் மாவட்டத்தில் பணி புரிபவர்கள் தர்மபுரி (அ) கிரஷ்ணகிரி மாவட்டத்தில் பயில முடியாது என்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் நான் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவன். இதனால் மிகுந்த  மண உலைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

இதுவரை பல்கலை கழகத்தில் இருந்து தேர்வு பட்டியல் வெளிவிடவில்லை. ஆகவே இந்த புதிய அறிவிப்பை ரத்து செய்து தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் உயர்கல்வி பயிலலாம் என்பதனை அறிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி


                                                                                                        இப்படிக்கு
                                                                                                        தங்கள் உண்மையுள்ள
                                                                                                       XXX

இடம் : தர்மபுரி
தேதி : 27-10-2018