Science Fact - பச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதேன் ?


இப்பழக்கம் இளங்குழந்தைகளுக்கு இயற்கையாகவே வருவதாகும். குழந்தைகள் பிறந்தவுடனே தாய்ப்பால் அருந்துகின்றன; பின்னர் புட்டிப்பால் குடிக்கின்றன.




அப்போது வாயினால் பாலை உறிஞ்சிக் குடிக்கும்போதும், தொடர்ந்து அவ்வப்போது கை விரல்களைச் சூப்பும் போதும்இப்பழக்கம் குழந்தைகளுக்கு வந்துவிடுகிறதெனலாம். மேலும் கைவைிரல்களைச் சூப்புவதால் குழந்தைகளுக்கு ஒருவகைப் பாதுகாப்பு உணர்வு உண்டாவதாகக் கருதப்படுகிறது.



மருத்துவ வல்லுனர்கள் கருத்துப்படி,குழந்தைகளின் இப்பழக்கத்தைப் பற்றி அநாவசியமான கவலை கொள்ளத்தேவையில்லை. அச்சம், கவலை, துக்கம் ஆகியவை காரணமாக பெரிய சிறுவர்களும் அவ்வப்போது கைசூப்புவதுண்டு. இதற்குக் காரணம் இப்பழக்கத்தினால் அவர்கட்கு ஒருவகை உணர்வுபூர்வமான ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றன. இருப்பினும் வளர்ந்த குழந்தைகள் இப்பழக்கத்தை மேற்கொள்ளும்போது அதனைக் கண்டிப்பாகத் தடுத்திட வேண்டும்.



Share:

Categories