Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 10, 2018

ஹோமியோபதி மருந்தாளுநர் - நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கை: நவம்பர் 12 முதல் விண்ணப்பிக்கலாம்


இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.



இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் 2வில் அறிவியல் பாடங்களை முதன்மைப் பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.



இதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளிலும், பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை, நாகர்கோயில் பகுதிகளில் உள்ள அரசு ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளிலும் ரூ. 350-க்கான வரைவோலையைச் செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் மற்றும் விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "தேர்வுக் குழு அலுவலகம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, சென்னை-106' என்ற முகவரியில் நவம்பர் 12-ஆம் தேதி முதல் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க நவம்பர் 26 மாலை 5 மணி கடைசியாகும்.



No comments:

Post a Comment