அரசுப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செங்கம் அருகே மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், அரசுப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்திலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிக்கு ரூ.20 லட்சத்திலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன் கலந்துகொண்டு, அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார் கிளாஸ்) அமைக்க நிதியுதவி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள் மற்றும் 100 இளைஞர்களுக்கு தலைக்கவசம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.



நிகழ்ச்சியில் செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, மேல்ராவந்தவாடி கூட்டுறவு சங்கத் தலைவர் செந்தில்குமார், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி,#2990;ுன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் தரணிவேந்தன், செங்கம் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல்சர்தார், மேல்ராவந்தவாடி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மல்ரெட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel