Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 19, 2018

குரூப் 2 தேர்வு - உத்தேச விடை குறித்து கருத்து தெரிவிக்க நாளை கடைசி!


குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் குறித்து கருத்து தெரிவிக்க நாளையே (நவம்பர் 20) கடைசி நாளாகும். இந்நிலையில், தற்போது வரை 900 பேர் இந்த விடைகள் குறித்து மறுப்பு தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.



குரூப் 2 தேர்வு - உத்தேச விடை குறித்து கருத்து தெரிவிக்க நாளை கடைசி!
குரூப் 2 தேர்வு - உத்தேச விடை குறித்து கருத்து தெரிவிக்க நாளை கடைசி!
தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அடுத்த மூன்றாவது நாளிலேயே இத்தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும், இந்த விடைகள் குறித்து தேர்வர்களிடம் இருந்து கருத்தும் கேட்கப்பட்டது.



முந்தைய காலங்களில் உத்தேச விடைகள் குறித்தும், அதனை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி வைக்கப் பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த நடைமுறை ஒரு மாதத்திற்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால் இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணைய தளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

குவியும் புகார்கள்:-

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்தியேக இணையதள வசதியை http://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் உருவாக்கியுள்ளது.



அவற்றில், தங்களுடைய பெயர், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வுப் பாடத்தின் பெயர் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்து தங்களுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

தற்போது வரை 900 பேர் சமீபத்தில் நடந்த குரூப் 2 தேர்வு உத்தேச விடைகளை மறுத்துப் பதிவிட்டுள்ளனர். விடைகளை மறுப்பதற்கான வாய்ப்புகள் நாளையுடன் (நவம்பர் 20) முடிவடைகிறது



No comments:

Post a Comment