Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 19, 2018

மருத்துவ படிப்புக்கு 1,000 மாணவர்கள் தேர்வாவர்': 'நீட்' பயிற்சி மீது செங்கோட்டையன் நம்பிக்கை


''அரசு சார்பில் வழங்கப்படும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியால், இந்தாண்டு, 1,000 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளிகளில் இருந்து செல்வர்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி பவள விழாவுக்கு, தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவானந்தம் வரவேற்றார்.



பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயில, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், வரும் ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கான வகுப்புகள் கூடுதலாக்கப்படும்




No comments:

Post a Comment