Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 29, 2018

பிளஸ் 2 துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில்
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.




இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (நவ. 29) பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 



அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment