Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 10, 2018

சிவகாசி அரசு பள்ளி ஆசிரியருக்கு தேசிய தொழில்நுட்ப நல்லாசிரியர் விருது


சிவகாசி அரசு பள்ளி ஆசிரியர் கருணைதாஸ், தேசிய தகவல் தொழில் நுட்ப நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்



மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள என்.சி.இ.ஆர்.டி., (சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜிகேஷனல் டெக்னாலஜி ) சார்பில், பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கல்வியை ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்ப நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது

கடந்த 2017ம் ஆண்டிற்கான விருது தாமதமாக தற்போது அறிவித்துள்ளது. அதில் இந்தியா முழுவதும் 43 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளனர்

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் பி.கருணைதாஸ்,காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்,
ஜி.செல்வகுமார்,விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் வீ. லாசர்,
ரமேஷ் தேர்வு,
செய்யப்பட்டுள்ளனர்.



இவ்விருது நவம்பர் 21 ல் டெல்லி ஜன்பத் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment