Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 9, 2018

ஓபிசி மாணவர்களுக்கு வங்கி தேர்வு இலவச பயிற்சி


யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணி யாளர் நலச் சங்க தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:-






பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கம், எம்பவர் அறக் கட்டளை மற்றும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கவுள்ளது.



இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 23 முதல் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும். இதில் பங் கேற்க விரும்பும் ஓபிசி மாணவர் கள் வங்கி தேர்வு வாரியத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண் ணப்பத்தின் நகலை empower.socialjustice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது periyariasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சி வகுப்புக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பதிவு கட்டண மாக ரூ.100 மட்டும் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விவரங் களுக்கு 9381007998, 9092881663 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.



No comments:

Post a Comment