மாஸ்கோ : நிலவில் அமெரிக்கா கால் பதித்தது உண்மையா? என்பதை ஆராயப் போவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அப்போலோ 11 தொடங்கி நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பி வைத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா நிலவில் கால் பதித்து விட்டதா என்பதில் இன்னும் சந்தேகமும், கேள்விகளும் தொடர்கின்றன.
இதை ஆராய்ச்சி செய்து உண்மையை வெளிக் கொண்டுவரப் போவதாக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரொகோஸின் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் முன் மொழியப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிலவுக்கு அமெரிக்கா மனிதர்களை அனுப்பியதாக சொன்னது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டறிய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Why did they keep their mouth shut for so long
ReplyDelete