Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 8, 2018

மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்: ஆட்சியர்


மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் 100 மீ. ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளிலும், 5 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் 200 மீ. ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளிலும், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் 400 மீ. ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கலாம்.

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 50 மீ., 100 மீ. ஓட்டம் மற்றும் நின்றுகொண்டு நீளம் தாண்டுதல் போட்டிகளிலும், 15 முதல் 17 வயதுகுள்பட்டவர்கள் 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளிலும், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் 400 மீ. ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்கலாம்.



கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு, நடக்கும் திறனற்ற, காலிப்பர் மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் 12 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 50 மீ. நடை போட்டியிலும், சக்கர நாற்காலி பயன்படுத்தும் 15 முதல் 17 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் 100 மீ., 150 மீ. ஓட்டப் போட்டியிலும், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் 75 மீ. ஓட்டப் போட்டியிலும் பங்கேற்கலாம். கை கால் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் 50 மீ., 15 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் 75 மீ., 100மீ., 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மனவளர்ச்சி குன்றிய 12 முதல் 14 வயதுவரை உள்ள மாற்றுத்திறனாளிகள் நின்று நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஓடி நீளம் தாண்டுதல் போட்டியிலும், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 மீ. ஓட்டப் போட்டியிலும் பங்கேற்கலாம்.



இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத் தொலைப்பேசி 04365-253041 என்ற எண்ணில் நவ.9-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment