Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 8, 2018

பல்கலை காலிப்பணியிடம் விண்ணப்பிக்க இன்று கடைசி


பாரதியார் பல்கலையின் கீழ் காலியாகவுள்ள பதிவாளர் உள்ளிட்ட, ஐந்து முக்கிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, இன்றுடன் அவகாசம் முடிகிறது.

பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைதுார கல்வி மைய இயக்குனர், மக்கள் தொடர்பு அதிகாரி, கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன் உள்ளிட்ட, 9 முக்கிய பணியிடங்கள், கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன.



இதனால், நிர்வாக பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.துணைவேந்தர் தவிர்த்து, பதிவாளர் உட்பட ஐந்து முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், இரண்டு வாரங்களாக பெறப்பட்டு வருகின்றன. 

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம், இன்றுடன் முடிகிறது.பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை. பெறப்பட்ட விண்ணப்பங்கள், சிறப்புக்குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படும்,'' என்றார்.



No comments:

Post a Comment