Sunday, November 11, 2018

மாநில ஓவியப் போட்டி: அரசு பள்ளி சாதனை!!

மாநில ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர் அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான மாநில அளவிலான, கலா உத்சவ் போட்டி, திருச்சியில் நடந்தது



ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண், மாநில முதலிடம் பிடித்துள்ளார்

இவர், தேசிய அளவில் டில்லியில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். மாணவரை, முதன்மை கல்வி அலுவலர் உஷா பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்



மேலும், மாணவருக்கு பயிற்சியளித்த கலை ஆசிரியர் கேசவன், தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment