Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 18, 2018

புயலால் சேதமடைந்த பாடப்புத்தகங்களுக்கு பதில் பதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


கஜா புயலால் சேதமடைந்த பள்ளி பாடப்புத்தகங்கள் பதில் புதிய பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்தில் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.





ஈரோடு மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துரையாடினார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கஜா புயல் தாக்குதல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 136 நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கூரை ஓடுகள் சேதம் அடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சேதமடைந்த இப்பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்பட்டு, மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகளின் பாடப்புத்தகங்கள் மழையால் சேதமாகியிருந்தால் ஒரு வாரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.



இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment