Search This Blog

Saturday, November 17, 2018

பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

0 comments
கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை கனமழை பெய்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகம்
சார்பில் இணைப்புப் பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.17) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.



இருப்பினும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் வழக்கம் போல் சனிக்கிழமை பருவத் தேர்வு நடைபெறும் என பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாலிடெக்னிக். தேர்வுகளும் ஒத்திவைப்பு: தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கு சனிக்கிழமை (நவ.17) நடத்தப்பட இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. சனிக்கிழமை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறும்.

No comments:

Post a Comment