Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 9, 2018

ஷாலாச த்தில், அனைத்து பள்ளிகளும், தகவல்களை பதிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்


மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுக்க, பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த, 'ஷாலாஷித்தி' திட்டம், கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது*



*தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் (நியூபா) சார்பில், திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் (www.shaalasiddhi.nuebha.org) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்யும் பட்சத்தில், நிதியுதவி அளிக்கப்படுகிறது*

*பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தேவையான அனைத்து வகை பயிற்சிகளும், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர, அக்.,31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது*

*கோவையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இந்த இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றியுள்ளன*



*பள்ளியின் பெயர், மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு பணிகள், கால அவகாசம் குறித்து, தெளிவாக குறிப்பிட்டு நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகள் இத்திட்டத்தில் பயனடைவதாக, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் கண்ணன் தெரிவித்தார்*

No comments:

Post a Comment