சென்னை ஐஐடிக்கு ரூ.14 கோடி நிதி: முன்னாள் மாணவர்கள் உறுதி

சென்னை ஐஐடி வளர்ச்சிக்காக ரூ.14 கோடி நிதி வசூலித்துத் தர முன்னாள் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.





இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 1983 மற்றும் 1993 பிரிவு மாணவர்கள் 300-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 





இவர்கள் சென்னை ஐஐடி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சியை மேம்படுத்தவும் நிதி வசூலித்துத்தர உறுதியளித்தனர். 1983 பிரிவு மாணவர்கள் ரூ. 12 கோடியும், 1993 பிரிவு மாணவர்கள் ரூ. 2 கோடியும் வசூலித்துத் தர உறுதியளித்துள்ளனர். 





சிறந்த முன்னாள் மாணவர் விருது: இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறந்த முன்னாள் மாணவர் விருது 12 பேருக்கு வழங்கப்பட்டது.

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here
Share:

Categories