
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.