குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சான்றிதழ்களை பதிவேற்றவும் கடைசி வாய்ப்பாகும்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 2-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிந்த நிலையில், முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பாக அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்குக் கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமான ரூ.150-ஐ தேர்வாணைய இணையத்தில் (www.tnpscexams.net) மட்டுமே வரும் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.
கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்
Join Our WhatsApp Group Click Here
Join Our Facebook Page Click Here

No comments:
Post a Comment