தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள் டிச.22 இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி வார இறுதி நாள்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொலைநிலைக்கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான 2018-ஆம் ஆண்டு தேர்வுகள் வரும் 22- ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. 

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும். மாணவர்கள் www.ideunom.ac.in என்ற தொலைநிலைக் கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து தேர்வறை நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 




தேர்வு கால அட்டவணை, தேர்வு மைய விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories