Search This Blog

Wednesday, December 19, 2018

ஆசிரியர் தகுதி தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக 4 மையம் அமைப்பு

0 comments
தனியார் பள்ளி ஆசிரியருக்கான தகுதி தேர்வு :4 மையம் அமைப்பு திருப்பூர்: வரும், 20 மற்றும், 21ம் தேதி இரு நாட்கள் தனியார் பள்ளி ஆசிரியருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில், 1,327 பேர் தேர்வெழுதுகின்றனர்







ஆசிரியர் பயிற்சி பெறாமல் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும், என, மத்திய அரசு அறிவித்தது





தகுதித்தேர்வு எழுதாமல், தனியார் பள்ளிகளில் பயின்று வரும் ஆசிரியர்களுக்கு வரும், 20 மற்றும், 21ம் தேதி தகுதித்தேர்வு நடக்கவுள்ளது குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 428 பேர், பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 330, தாராபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 150, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 419 என மொத்தம், 1,327 பேர் தேர்வெழுத உள்ளனர்

No comments:

Post a Comment