Breaking

Saturday, December 8, 2018

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்கலாம் : அரசாணை வெளியீடு


அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களில் 814 கணினி ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.






இதுகுறித்து நேற்று வெளியான அரசாணை:கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தற்போது 2939 அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் தற்போது 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



ெபாதுத் தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தற்காலிக ஏற்பாடாக நவம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 முடிய 4 மாதங்கள் அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமனம் மூலம் கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ஒன்றுக்கு ₹7500 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் போது குழு ஒன்று அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்க வசதியாக ₹250 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று ஆணையிட்டுள்ளது.



அதன்படி, மேற்கண்ட பணியிடங்களில் கணினி ஆசிரியர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அந்தந்த ஊர்களில் பள்ளி அருகில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் கணினி பட்டம் பெற்று பிஎட் தகுதி பெற்றவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தேர்வுக் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment