Thamizhkadal WhatsApp Channel

மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்.!!

மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கட்டப்பட்ட, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதகை உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் அங்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறினார்.





மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories