Thamizhkadal WhatsApp Channel

உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை முடிந்தும் மாணவர்களின் கல்விச் சான்றை திருப்பி தராத கல்லூரிகள்

உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை முடிந்தும், மாணவர்களின் அசல் கல்விச் சான்றிதழை திருப்பி கொடுக்காத கல்லூரிகளுக்கு, பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.






பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 11 அரசு கலைக்கல்லூரிகள், 5 பல் கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 16 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1 முதுநிலை பட்டப்படிப்பு மையம், 89 சுயநிதி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆராய்ச்சி படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் அதற்கு முன்பு படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். அவை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் அவகாசம் தேவைப் படும்.





அதன்பின்னர் சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக மாணவர் களுக்கு அவர்களின் சான்றிதழ் களை ஒப்படைத்து விடும். மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) மட்டும் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வழங்கப்படும். ஆனால் தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் முந்தைய கல்வித்தகுதி சான்றிதழ்கள், அவர்களின் படிப்பு முடியும் வரை வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: இளநிலை படிப்பு என்றால் 3 ஆண்டுகளுக்கு பின்னரும், முதுநிலை படிப்பு என்றால் 2 ஆண்டுகளுக்கு பின்னரும் தனியார் கல்லூரிகளில் எங்களுடைய எஸ்எஸ்எல்சி., பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களைக் கொடுக்கின்ற னர். தவிர்க்க முடியாத காரணங் களால் படிப்பை பாதியில் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், படிப்பு காலம் முழுவதற்குமான கல்விக் கட்டணத்தை செலுத் தினால் மட்டுமே சான்றிதழ்களை வழங்க முடியும் என்று நிர்பந்திக்கின்றனர்.





விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் என்றால் விடுதி கட்டணத்தையும், கல்லூரி பேருந்தில் வந்து செல்பவர் கள் என்றால் போக்குவரத்துக் கட் டணத்தை முழுவதும் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்து கின்றனர். இதனால் விரும்பினா லும், விரும்பாவிட்டாலும் அந்த கல்லூரிகளிலேயே படிப்பைத் தொடர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சான்றிதழ்கள் கிடைக்காததால் அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சான்றிதழ்கள் உண்மைத்தன்மைக்கு உட்படுத் தப்பட்டு, பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பி வந்த பின்னர் உடனடியாக அவற்றை வழங்க வேண்டும். இதற்கு பாரதியார் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை வேண்டும்.





இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பி.வனிதா அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், கடந்த டிச. 21-ம் தேதி அனுப்பியுள்ள எச்சரிக்கை நோட்டீஸில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் அசல் சான்றிதழ் கள் உண்மைத் தன்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கல்லூரி நிர்வாகங்கள் அவற்றைத் திருப்பி வழங்குவ தில்லை என்று தொடர்ச்சியாக புகார் வந்துள்ளது. அவற்றை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும். இதுபோன்ற புகார்கள் மீண்டும் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது




Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories