Thamizhkadal WhatsApp Channel

முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாட நூல் புத்தாக்கப் பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு 11ஆம் வகுப்புக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா புதுக்கோட்டை சிவபுரம் ஜே.ஜே.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது



புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நடராஜன் வரவேற்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை வகித்துப் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார் முதற்கட்டமாக டிச.6 மற்றும் 7 ஆம் தேதிகளில் முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக டிச.10,11 ஆம் தேதிகளில் தாவரவியல், விலங்கியல் ஆசிரியர்களுக்கும்



மூன்றாம் கட்டமாக டிச.12,13 தேதிகளில் விலங்கியல் ஆசிரியர்களுக்கும்,13,14 தேதிகளில் வேதியியல் ஆசிரியர்களுக்கும், நான்காம் கட்டமாக டிச.17,18 தேதிகளில் வேதியியல் ஆசிரியர்களுக்கும் ஐந்தாம் கட்டமாக டிச.17,18 தேதிகளில் கணித ஆசிரியர்களுக்கும், டிச.18,19 தேதிகளில் இயற்பியல் ஆசிரியர்களுக்கும், ஆறாம் கட்டமாக டிச.19,20 தேதிகளில் கணித ஆசிரியர்களுக்கும் , டிச.20,21 தேதிகளில் இயற்பியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு டிச.21,22 ஆகிய தேதிகளில் பயிற்சி நடைபெறும்



Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories