'அரசு பொதுத்தேர்வில், அனைத்து பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் உஷா அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில், கடந்த, டிசம்பர் மாதம் அரையாண்டுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில், நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் கண்டறியப்பட்டன. அதன்படி, 90க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்தன. அந்த பள்ளிகளில், வரும், பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, முதன்மை கல்வி அலுவலர் உஷா, பாடவாரியாக ஆய்வு மேற்கொண்டார். அதில், 'அரையாண்டு தேர்வில், தோல்வி அடைந்த மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். 'அதேபோல், அனைத்து பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சியை எட்டும் வகையில், பாட ஆசிரியர்கள், அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்' என்றும், அவர் வலியுறுத்தினார். மாவட்டம் முழுவதுமிருந்து, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» அரசு பொதுத்தேர்வில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு C.E.O அறிவுரை
அரசு பொதுத்தேர்வில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு C.E.O அறிவுரை
தமிழ்க்கடல்Sunday, January 20, 2019





