ஆசிய ஊடகவியல் கல்லூரியில் வானிலை தொடர்பான அதிநவீன பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆசிய ஊடகவியல் கல்லூரி (Asian College of Journalism) நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, வானிலை தற்போது வெகுவாக மாற்றம் அடைந்துள்ளது. அதன் விளைவாக பல்வேறு பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. எனவே, தற்காலத்தில் வானிலையை சரியாக கணிப்பது மிகவும் அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு, வானிலை தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கிவரும் ஐபிஎம் பிசினஸ் நிறுவனத்துடன் இணைந்து, வானிலை தொடர்பான புதிய பாடப்பிரிவை ஆசிய இதழியல் கல்லூரி தொடங்க உள்ளது.

அதில், உலகத்தரம் வாய்ந்த வானிலை தொழில்நுட்பம், வானிலை கண்காணிப்பு கருவிகளைக் கொண்டு, வானிலை தொடர்பான தரவுகள் அடிப்படையில் வானிலை பற்றி புரிந்துகொள்ளுதல், வானிலையால் மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழலிலும் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை குறித்து கற்பிக்கப்படும்.
பிரபல வானிலை ஆராய்ச்சியாளர்கள், பருவநிலை வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு வானிலை முன்னறிவிப்பை கணிப்பது குறித்தும், வானிலை செய்திகளை எப்படி வழங்குவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். வளர்ந்துவரும் ஊடகவியலா ளர்கள், வானிலை தொடர்பான செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள் உள்ளிட் டோருக்கு இந்த புதிய பாடப் பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்லூரி தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.