அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2019-ம் ஆண்டு மார்ச் மாத 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, கடந்த 7-ந் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அன்றைய தினங்களில் விண்ணப்பிக்க தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் 23-ந் தேதி(இன்று) புதன்கிழமையும், 24-ந் தேதி வியாழக்கிழமையும் ஆன்-லைனில் விண்ணப்பிக் கலாம். தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை தட்கல் திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு சலுகை: தட்கல் திட்டத்தில் இன்று விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு சலுகை: தட்கல் திட்டத்தில் இன்று விண்ணப்பிக்கலாம்
தமிழ்க்கடல்Wednesday, January 23, 2019





