Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 30, 2019

பள்ளிகளில் இனி மலேசிய, அமெரிக்க பாடத்திட்டங்கள்... 12ம் வகுப்பு படித்தாலே வேலை


பள்ளிகளில் இனி மலேசிய, அமெரிக்க பாடத்திட்டங்கள்... Malaysian and US curriculum in schools now ... 12ம் வகுப்பு படித்தாலே வேலை மலேசியா, அமெரிக்கா நிறுவனங்களோடு ரூ.2500 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவியல் பாடத்திட்டங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். 12ம் வகுப்பு படித்தாலே இனி வேலை வாய்ப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.






நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இது குறித்து பேசிய அவர், ''அனைத்து அரசு பள்ளிகளிலும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மூலம் மேற்கொள்ளபடும். அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள் மத்திய அரசால் பெல்ஜியம் அனுப்பப்படும் அளவுக்கு தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்திருக்கிறது. மாணவர்கள் வெளிநாடுக்களுக்கு செல்லாமல் உள்நாட்டிலேயே திறமையை காட்ட வேண்டும். இனி 12ம் வகுப்பு படித்தாலே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.தமிழகத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் பொறியியல் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.



இனி வரும் காலங்களில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லை என்கிற நிலை உருவாகக் கூடாது. அதை மனதில் வைத்தே அடுத்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம்.ஏற்கெனவே, 1. 6, 9, 11 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது
அடுத்து 2, 3, 4, 5, 7, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு மொத்தமாக மாற்றப்பட உள்ளது. அப்படி மாற்றப்படும் பாடத்திட்டம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும். மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் சரளமாக கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என அவர் தெரிவித்தார்.