Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 30, 2019

டெய்லர், சமையலர் உள்ளிட்டோருக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலை!


டெய்லர், சமையலர் உள்ளிட்ட உதவியாளர் பணியிடங்களின் கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் 1763 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துப்புரவாளர், முடி திருத்துநர், சமையலர், தச்சர் (கார்பண்டர்), தையல்காரர் (டெய்லர்), காலணி சீரமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.







இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.bsf.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அவர் சம்பந்தப்பட்ட தொழில்களில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராகவோ அல்லது ஓராண்டு பயிற்சி பெற்றவராகவோ இருத்தல் அவசியமானது. 2019 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி 18 முதல் 23 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.



இந்தப் பணியில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,700 முதல் 69,100 வரை ஊதியம் மற்றும் படிகள் சேர்த்து வழங்கப்படும்