தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 85 பணியிடங்களுக்காக நடத்திய குரூப்-1 முதல்நிலை தேர்வில் 4,500 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் 2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வை எழுதினார்கள்.
முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியிடப்பட்டது. அவர்களில் 176 பேர் கடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று வரை நடந்த நேர்முக தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள். முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மதிப்பெண்கள் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் டி.இளவரசி 650.5 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். டி.சங்கீதா (649 மதிப்பெண்) 2-வது இடமும், எஸ்.இலக்கியா (642) 3-வது இடமும், ஆர்.மந்தாகினி (641) 4-வது இடமும் பிடித்துள்ளனர். முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.