பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்ட மைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் கடந்த 4 நாட்களாக வகுப்புகள் நடைபெறவில்லை. இதற்கிடையே நேற்று முன் தினம் பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஆசிரியர்கள் போராட் டத்தால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் தேவை யான இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தகுதியான பட்டதாரிகளை ரூ.7,500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம். வருகிற 28-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரியலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை குறித்து விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டபோது, "பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வரிடமும் ஆண்டு ஒன்றுக்கு தலா 50 ரூபாய் பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்காக பெறப்படுகிறது. அத்தொகையில் குறிப்பிட்ட சதவீதம் மாநில மற்றும் மாவட்ட பெற்றோர் -ஆசிரியர் கழகத்துக்கு சந்தா அனுப்பப்பட்டு, மீதமுள்ள தொகையில் தற்போது தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. மேலும் பள்ளியில் சில அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் இத்தொகை பயன் படுத்துவதால், ஏற்கெனவே பற்றாக்குறை நிலவுகிறது.
இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்றே பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதி சார்ந்த செயல்பாடுகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்வித்துறை அரசாணையில் குறிப்பிட்டிருப்பது போல தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்தாலும் அவர் களுக்கு ஊதியம் அளிக்க தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர் - ஆசிரியர் கழகத்திடம் நிதி இல்லை என்பதே உண்மை'' என்கின்றனர். தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்தாலும் அவர்களுக்கு ஊதியம் அளிக்க பெற்றோர் - ஆசிரி யர் கழகத்திடம் நிதி இல்லை என்பதே உண்மை.