28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்! யாரை? எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்

அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும், 7,500 ரூபாய்சம்பளத்தில், புதிதாகதற்காலிக ஆசிரியர்களைநியமிக்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.



அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் சங்கங்களின்கூட்டமைப்பான, 'ஜாக்டோ -ஜியோ' சார்பில், 22ம் தேதிமுதல், வேலை நிறுத்தப்போராட்டம் நடந்துவருகிறது. இந்தப்போராட்டத்தில், ஆசிரியர்சங்கங்களில் சில பிரிவினர்பங்கேற்றுள்ளனர்.அதனால், தொடக்கப்பள்ளிகள் பெருமளவில்பாதிக்கப் பட்டுள்ளன.எனவே, மாதம், 7,500 ரூபாய்சம்பளத்தில், தற்காலிகஆசிரியர்களை நியமிக்க,தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

பாதிப்பு



இது தொடர்பாக, பள்ளிகல்வி முதன்மை செயலர்,பிரதீப் யாதவ் பிறப்பித்துஉள்ள உத்தரவு:ஆசிரியர்கள்போராட்டத்தால், தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகளின் செயல்பாடுபாதிக்கப் பட்டுள்ளது.பொதுதேர்வுமாணவர்களுக்கு,செய்முறைத் தேர்வை,உடனே துவங்க வேண்டியநிலை உள்ளது. எனவே,மாணவர்கள் நலன் கருதி,பள்ளிகளை திறந்து பாடம்நடத்த, தகுதியானஆசிரியர்களைதற்காலிகமாக நியமிக்க,தொடக்க கல்வி இயக்குனர்அறிக்கை அளித்துஉள்ளார்.எனவே,பள்ளிகளின் பெற்றோர் -ஆசிரியர் கழகம் சார்பில்,தற்காலிக ஆசிரியர்களை,மாதம், 7,500 ரூபாய்சம்பளத்தில், உடனடியாகநியமிக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்,இடைநிலைஆசிரியருக்கான, ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், பி.எட்., மற்றும்முதுநிலை பட்டப் படிப்புமுடித்தவர்களைதேர்வுசெய்யலாம்.ஒவ்வொரு தொடக்கப்பள்ளிக்கும், குறைந்தது ஒருதற்காலிக ஆசிரியரைநியமித்து, பள்ளிகளைஇயக்க வேண்டும்.மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப,தற்காலிக நியமனத்தைஅதிகரித்துகொள்ளலாம்.'போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்,உடனே பணிக்கு திரும்பவேண்டும்' என, சென்னைஉயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.எனவே,ஆசிரியர்கள் இன்று முதல்பணிக்கு வராவிட்டால்,அவர்கள் மீது,நாளை முதல், முதன்மைகல்வி அதிகாரிகள்வாயிலாக, ஒழுங்குநடவடிக்கை துவங்கும்.


வரும், 28 முதல், தற்காலிகஆசிரியர்கள்




உதவியுடன், பள்ளிகள்தொடர்ந்து இயக்கப்படவேண்டும். பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கைகளுக்கும், பணிக்குவரும் ஆசிரியர்களுக்கும்யாராவது தொல்லைதந்தால், அருகில் உள்ளபோலீஸ் நிலையத்தில்புகார் அளித்து, மாவட்டகல்வி அதிகாரிகள், உரியசட்ட நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்.ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டநாட்களுக்கு சம்பளப்பிடித்தம் செய்து, அதன்விபரத்தை கருவூலத்துக்குஅனுப்ப வேண்டும்.இவ்வாறு, உத்தரவில்கூறப்பட்டுள்ளது.

'நோட்டீஸ்'


'வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவது சட்ட விரோதம்என்பதால், வேலைக்குவராத ஆசிரியர்கள் மீது,ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப் படும்' என, பள்ளிகல்வித்துறைஎச்சரித்துள்ளது; போராடும்ஆசிரியர் களுக்கு,'நோட்டீஸ்'அனுப்பவும்உத்தரவிட்டுள்ளது. பள்ளிகல்வித்துறை இயக்குனர்,ராமேஸ்வர முருகன்பிறப்பித்துள்ள உத்தரவு:



அரசு பணிகள் பாதிக்கும்வகையில், 'ஸ்டிரைக்'போன்ற நடவடிக்கையில்ஈடுபடுவது,அரசுபணியாளர் நடத்தைவிதிகளின் படிவிதிமீறலாகும்.'அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவதை நியாயப்படுத்தமுடியாது; அது சட்டவிரோதம்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தற்போது, பள்ளிகளில்திருப்புதல் தேர்வு,செய்முறைத் தேர்வுக்கானபயிற்சிகள் துவங்கி இருக்கவேண்டும். ஆனால்,ஆசிரியர்கள்போராட்டத்தால், இந்தபயிற்சிகள் பாதிக்கப் பட்டுஉள்ளன. செய்முறைத்தேர்வுகள் நடக்காமல், பாடம்நடத்தப்படாமல், அரசு, அரசுஉதவி பள்ளிமாணவர்கள்கடுமையாகபாதிக்கப்படுவர்.அடிப்படைதொடக்க கல்விமாணவர்கள் நிலை,இன்னும்மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலைமோசமாகி, எந்தபெற்றோரும், அரசுபள்ளிகளில் குழந்தைகளைசேர்க்க மாட்டார்கள். இந்தநிலையை தடுக்க,ஆசிரியர்கள் மற்றும்ஊழியர்கள், உடனடியாகபணிக்கு திரும்பவேண்டும்.வேலைக்குவராத நாட்கள், அனுமதிபெறாத விடுமுறையாககணக்கிடப்பட்டு, சம்பளம்மற்றும் இதர படிகள்வழங்கப்படாது.அனுமதிபெறாமல், பணிக்கு வராதஊழியர்களின் மீது,ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.தற்காலிக விடுப்பு,மருத்துவ விடுப்பு உள்ளிட்ட,எந்த வகைவிடுப்பும்,போராட்ட காலத்தில்வழங்கப்படாது. மருத்துவவிடுப்பு கேட்டு, போலியானதகவல்களை அளிப்பது,மருத்துவ விடுப்பு ஆய்வுக்குழுவுக்கு தெரிய வந்தால்,சம்பந்தப்பட்டவர்கள் மீது,குற்ற நடவடிக்கைஎடுக்கப்படும்.இது குறித்து,முதன்மை கல்விஅதிகாரிகள், சம்பந்தப்பட்டஊழியர்களை பணிக்குதிரும்ப அறிவுறுத்தி, 'நோட்டீஸ்' அனுப்பவேண்டும். அதை மீறி,போராட்டத்தில் பங்கேற்றால், ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படும். இவ்வாறு,உத்தரவில்கூறப்பட்டுள்ளது.

'குடியரசு தினத்தைபுறக்கணிக்காதீங்க'




குடியரசு தினம், நாளை நாடுமுழுவதும்கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,தொடக்க கல்வி இயக்குனர்கருப்பசாமி, முதன்மைகல்வி அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ள சுற்றறிக்கை:குடியரசு தினத்தை, நாளைஅனைத்து கல்விஅலுவலகங்கள் மற்றும்பள்ளிகளில் சிறப்பாககொண்டாட வேண்டும்.கொடிமரத்தை புனரமைத்து,சரிபார்க்கவேண்டும்.நாட்டிற்கு நல்லகுடிமக்களை உருவாக்கும்உன்னதபணியில்ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்,பள்ளிகளில் குடியரசு தினவிழாவிற்கு ஏற்பாடு செய்து,அதில்பங்கேற்க வேண்டும்.இதற்கு, முதன்மை கல்விஅதிகாரிகள் வலியுறுத்தவேண்டும்.மாணவர்களுக்குபேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தி பரிசுவழங்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும்,வனத்துறை உதவியுடன்மரக்கன்றுகள் நட்டு,அவற்றை பராமரிக்கவேண்டும். அன்றையதினம், நாட்டுப் பற்று,பண்பாடு மற்றும்கலாசாரத்தை விளக்கும்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்து, மாணவர்கள்வாயிலாக நடத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்விஅதிகாரிகள் தகவல்அனுப்பி, ஆசிரியர்களைகுடியரசு தினம் கொண்டாடவரும்படி, அழைப்புவிடுத்துள்ளனர்.

'டிஸ்மிஸ்'




பள்ளி கல்வி இயக்குநரகம்வெளியிட்ட எச்சரிக்கையில், 'பள்ளி கல்வித் துறையில்,தற்காலிகமாகபணியாற்றுபவர்கள்,போராட்டத்தில் பங்கேற்பதுதெரிய வந்தால், அவர்கள்உடனடியாக பணிநீக்கம்செய்யப்படுவர்' என,கூறப்பட்டுள்ளது.


'வேலை நிறுத்தம்வாபசாகுமா'


'ஜாக்டோ - ஜியோ'ஒருங்கிணைப்பாளர்கள்ஆலோசனை கூட்டம், நேற்றுசென்னையில் நடந்தது.அதில் எடுக்கப்பட்டமுடிவுகள் குறித்து,ஒருங்கிணைப்பாளர், தாஸ்அளித்த பேட்டி: எங்களின்போராட்டத்துக்கு, உயர்நீதிமன்றம், எந்த தடையும்விதிக்கவில்லை. எனவே,எங்கள் போராட்டம்தொடரும்.மாவட்டதலைநகரங்களில், இன்றுமறியல் நடத்தப்படும்.நாளை, ஜாக்டோ -ஜியோவின் உயர்மட்டகுழுகூட்டம், சென்னையில்நடக்கும். 28ம் தேதி முதல்,போராட்டம் மறுவடிவம்பெறும்.இவ்வாறு, அவர்கூறினார்.




'போராட்டத்தை வாபஸ்பெறுவீர்களா' என,நிருபர்கள்கேட்டனர்.அதற்கு, ''வரும், 28ம் தேதி,மதுரை உயர்நீதிமன்றகிளையில், ஜாக்டோ -ஜியோ தொடர்பான வழக்கு,விசாரணைக்கு வர உள்ளது.அப்போது, உரிய முடிவுஎடுப்போம்,'' என, தாஸ்தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்குஆதரவாக, சென்னை,தலைமைச் செயலகஊழியர்கள்,நேற்றுமதியம்,உணவு இடைவேளையின்போது, தலைமை செயலகசங்க முன்னாள் செயலர்வெங்கடேசன்தலைமையில், கோட்டைவளாகத்தில்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Share:

Categories