தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைகளிலும் முத்திரை பதிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் அதேபோல ஒரு சரித்திரத்தை படைப்பதற்காக ‘தங்கப் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்’, என்று ஒரு மாதத்துக்கு முன்பாக முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மிக விரைவில் அதன் பணிகள் நிறைவேற உள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து கிராமப்புற மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு 100 இடங்களில் ‘மினி ஸ்டேடியம்’ எனும் சிறிய அரங்கங்கள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகிற, போட்டிகளில் வெற்றி பெறுகிற மாணவர்களுக்கு ஊக்கத்தை தரும் வகையில் சி.எஸ்.ஐ.ஆர். நிதி மூலம் உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தீர்வாக அமையுமா?
பதில்:- இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அரசின் சிரமங்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, மாணவர்கள்-பெற்றோர் மனதில் உள்ள இன்னல்-இடர்பாடுகளை களைவதற்கு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
கேள்வி:- தற்காலிக ஆசிரியர்களும் போராட்டத்தை கையில் எடுக்கமாட்டார்களா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறதே?
பதில்:- அதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி, தீர்வு காணப்படும்.
மேற்கண்டவாறு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.