JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, February 5, 2019

பிப். 11-15ம் தேதி வரை மின்வாரிய பணிக்கு நேர்காணல்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் நேரடி பணிக்கான நேர்முகத்தேர்வு வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் நேரடி பணி நியமனத்திற்கான அறிக்கை கடந்த, 2016ல் அறிவிக்கப்பட்டு, எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில், 500 தொழில்நுட்ப உதவியாளர்/மின்னியல் மற்றும் 25 தொழில்நுட்ப உதவியாளர்/இயந்திரவியல் பதவிகளுக்கு தகுதி பெற்றனர்.



அவர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 11.02.2019 முதல் 15.02.2019 வரை நடைபெற உள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், நேர் முகத்தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அழைப்பு கடிதம் மற்றும் சரிபார்புப் பட்டியல் ஆகியவற்றை அவர்களது மின்னஞ்சல் முகவரியிலிருந்து பதிவு இறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.