Subscribe Us

Tuesday, February 5, 2019

தேனியில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: நாளை தொடக்கம்

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 1, ரயில்வே பொறியாளர் போட்டித் தேர்வுகளுக்கு பிப்.6 முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: குரூப் 1 மற்றும் ரயில்வே பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி மற்றும் மாதிரி தேர்வு நடைபெறும்.






தேர்வு பயிற்சி குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தற்கான சான்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி குறித்த விபரத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தொலைபேசி எண்: 04546-254510ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Popular Feed