Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்



மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


தமிழகத்தில் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-பிளஸ் 2 வகுப்பில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகளை ஓராண்டுக்கு முன்பாக பிளஸ் 1 வகுப்பிலேயே வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்தது.

இதன் அடிப்படையில், பிளஸ் 1 படிக்கும் 5.12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மடிக்கணினி பெறாத பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், அரசு-அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளி பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் என மொத்தம் 15.18 லட்சம் பேருக்கு விலையில்லாத மடிக்கணினிகள் வரும் கல்வியாண்டில் அளிக்கப்பட உள்ளது.


இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக ஏழு பேருக்கு மடிக்கணினிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.