Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

பெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள சிறப்புத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இளநிலை, முதுநிலை மாணாக்கர்களுக்கான சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 22 கடைசி தேதி என்றும், ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) மாணாக்கர்கள் விண்ணப்பிக்க பிப். 25 கடைசி தேதி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், மாணாக்கர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, மாணாக்கர்களின் நலன் கருதி, இச்சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், விண்ணப்பங்களை மாணவர்கள் பயின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேற்கண்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.