Search This Blog

Friday, February 22, 2019

பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு

0 comments
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வெழுத சேவை மையங்களின் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மார்ச் 2019 பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.