Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

``பீடி சுத்துறதுதான் பொழுதுபோக்கு'' - குரூப்-1 தேர்வில் வென்ற தியேட்டர் ஊழியரின் மகள் சரோஜா


நெ ல்லையில் உள்ள தியேட்டரில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகள் குரூப்-1 தேர்வு எழுதியதில் வெற்றி பெற்று டி.எஸ்.பி பணி வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழ் வழியில் தேர்வு எழுதிய அவர் முதல் முயற்சியிலேயே வென்று தேர்வாகியிருக்கிறார். சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் அதற்கான முயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்






நெல்லையைச் சேர்ந்த சரோஜா. ஏழ்மையான குடும்பம். சரோஜாவின் தந்தை முருகானந்தம் நெல்லைச் சந்திப்பு பகுதியில் உள்ள திரையரங்கில் சீட்டு கிழிக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். தாய் பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளியாக இருக்கிறார்.